உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழை நீர் தேங்கியதால் அவஸ்தை

மழை நீர் தேங்கியதால் அவஸ்தை

கிருஷ்ணராயபுரம், டிச. 15-கொம்பாடிப்பட்டியில், குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொம்பாடிப்பட்டி கிராமத்தில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. இதனால், மழை நீர் வடிந்து செல்லும் இடங்களில் செடிகள், மண் குவியல் காரணமாக குடியிருப்பு பகுதியில் தேங்கி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் மழை நீர் தேங்கியதால், அதிகளவிலான கொசுக்கள் பரவி வருகிறது. இரவு நேரங்களில் மக்கள் துாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தேங்கிய மழை நீரை, வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !