மேலும் செய்திகள்
25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலை
23-Apr-2025
கரூர்:கரூரில் முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கைகளை கேட்கும் வகையில், ராணுவ வீரர்கள் டூவீலரில் நேற்று வந்தனர்.சென்னை ரெஜிமென்ட்டில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்கள், 10 பேர் நேற்று கரூர் வந்தனர். பிறகு, கரூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், கரூர்-ஈரோடு சாலை முனியப்பன் கோவிலில் இருந்து, டூவீலரில் ராணுவ வீரர்கள் பேரணி புறப்பட்டனர்.கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, பேரணியை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்ளிட்ட போலீசார் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிறகு, முன்னாள் ராணுவ வீரர்களின் புகார்கள், கோரிக்கைகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் நலம் குறித்து, ராணுவ வீரர்கள் கேட்டறிந்தனர்.பிறகு, நேற்றிரவு கரூரில் தங்கிய ராணுவ வீரர்கள், இன்று காலை திண்டுக்கல் மாவட்டத்துக்கு புறப்பட உள்ளனர்.
23-Apr-2025