விஷ பூச்சி கடித்ததில் ரேஷன் விற்பனையாளர் பலி
கரூர், கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு அமராவதி நகரை சேர்ந்தவர் பிரபாகரன், 37. தான்தோன்றிமலையில் உள்ள, ரேஷன் கடை யில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த, 18 ல் ரேஷன் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, விஷ பூச்சி பிரபாகரனின் வலது முழங்காலில் கடித்துள்ளது. இதனால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன், உயிரிழந்தார். இதுகுறித்து, பிரபாகரனின் மனைவி போதும் பொண்ணு, 32; போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.