மேலும் செய்திகள்
செப். 5 ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
02-Sep-2024
கரூர்: தமிழக ரேஷன் கடைகளுக்கான, உணவு பாதுகாப்பு விதிகள் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம், தாசில்தார் தனசேகரன் தலைமையில், புகழூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.அதில், புகழூர் தாலுகாவில் உள்ள, 43 முழு நேர ரேஷன் கடைகள், 28 பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளிட்ட, 71 கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பொது மக்களிடம் காட்டும் அணுகு முறை, சரியான எடையில் பொருட்களை வழங்குதல், குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் கடைகளை திறந்து வைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், கூட்டுறவு துறை சார்பதிவாளர்கள் விஜி, அன்பரசன், வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேணி உள்பட பலர் பங்கேற்றனர்.
02-Sep-2024