உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு

ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு

நாமகிரிப்பேட்டை:கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், நாகராஜ் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளில் பணி-யாற்றும் ஊழியர்களுக்கு நீண்ட காலமாக ஊதிய உயர்வு வழங்-கப்படாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் இதற்காக பல கட்ட போராட்டங்களை ஊழியர்கள் நடத்தினர். தங்களுக்கு நியாய-மான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை அதற்-கான அரசாணை வெளியிடப்படவில்லை.இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்-களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்-னையில், 6ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவ-லகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் இதில், ரேஷன் கடை பணியாளர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை