மேலும் செய்திகள்
63 மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
19-Jul-2025
கரூர், கரூர் மாவட்டத்தில், தொலைந்து போன மொபைல் போன்களை, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.கரூர் சைபர் கிரைம் போலீசார் சார்பில், தொலைந்து போனது மற்றும் திருட்டு போன மொபைல் போன்களை கண்டுபிடிக்க, கடந்த சில மாதங்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 163 பேரின் மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பணத்தை இழந்த, 17 பேரின், 85 லட்சத்து, 18 ஆயிரத்து, 105 ரூபாய் குற்றவாளி களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ்.பி., ஜோஸ் தங்கையா, உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஏ.டி.எஸ்.பி.,க்கள் பிரேம் ஆனந்த், பிரபாகரன், குற்றப்பிரிவு டி.எஸ்.பி., முத்துக்குமார், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி, எஸ்.ஐ., சுதர்சன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.
19-Jul-2025