உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமி மாயம் உறவினர் புகார்

சிறுமி மாயம் உறவினர் புகார்

சிறுமி மாயம் உறவினர் புகார் குளித்தலை, நவ. 15-சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு சுப்பிரமணியபுரம் ஆறாவது வீதியை சேர்ந்தவர் கண்ணன் மகள் ஹரிணி, 17. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் கோபித்துக் கொண்டு கடந்த, 5ல், குளித்தலை என்.ஜி.ஓ., காலனியில் வசித்து வரும் உறவினர் சாந்தி, 40, என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தங்கியிருந்த சிறுமி கடந்த, 13 மாலை, 5:00 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது உறவினர் மகளை காணவில்லை என, சாந்தி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ