மேலும் செய்திகள்
கொடிகம்பங்கள் அகற்றும் பணி
27-May-2025
குளித்தலை, குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை, கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில், வதியம்-மருதுார் வரை, அய்யர்மலை முதல் குமாரமங்கலம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நடப்பட்டிருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்களை, நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ., சேகர் தலைமையில் சாலை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, குளித்தலை நகராட்சி சார்பில் காந்திசிலை சுற்றியுள்ள கட்சி கம்பங்களை அகற்றினர்.
27-May-2025