உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அன்சாரி தெருவில் சாக்கடை மூடி சீரமைப்பு

அன்சாரி தெருவில் சாக்கடை மூடி சீரமைப்பு

கரூர்: கரூர் அன்சாரி தெருவில், பாதாள சாக்கடை மூடி சரி செய்யப்பட்டது.கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், அடைப்பு மற்றும் சாக்கடை கழிவு வெளியேறும் போது, அதை சரி செய்ய சாலையில் வட்ட வடிவில், துவாரம் போடப்பட்டு, சிமென்ட் மூடி வைக்கப்-பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாநகராட்சி பகுதியில், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சேதம் அடைந்துள்ளன.குறிப்பாக, கரூர் அன்சாரி தெருவில் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் பாதாள சாக்கடை மூடி சேதம் அடைந்திருந்தது. இதனால், வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகும் நிலை இருந்தது. உடைந்த பாதாள சாக்கடை மூடியை சுற்றி, அந்த பகுதி பொதுமக்-கள தடுப்புகளை வைத்திருந்தனர்.இதுகுறித்து, சமீபத்தில் நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கரூர் மாநக-ராட்சி ஊழியர்கள் அன்சாரி தெருவில், உடைந்த பாதாள சாக்கடை மூடியை சரி செய்தனர். இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை