உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை நடுவே இருந்த மின்கம்பம் மாற்றியமைப்பு

சாலை நடுவே இருந்த மின்கம்பம் மாற்றியமைப்பு

அரவக்குறிச்சி, சாலை நடுவே இருந்த மின் கம்பத்தை, மின்வாரிய ஊழியர்கள் மாற்றியமைத்துள்ளனர்.அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் கலைவாணர் தெரு அமைந்துள்ளது. இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர். இங்குள்ள சாலை நடுவே மின்கம்பம் அமைந்திருந்ததால், எதிரே வாகனங்கள் வரும்போது தடுமாறி கீழே விழும் நிலை இருந்தது. மேலும் சாலையை கடந்து செல்ல மக்கள் சிரமப்பட்டனர்.இது குறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து பேரூராட்சி சார்பில், மின்வாரிய ஊழியர்களால் சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தை, சாலை ஓரத்திற்கு மாற்றி அமைத்து கொடுத்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ