உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாசன வாய்க்காலின் சிறு பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

பாசன வாய்க்காலின் சிறு பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

குளித்தலை, குளித்தலையில், தென்கரை பாசன வாய்க்கால், மணத்தட்டையில் இருந்து பெரியபாலம் மலையப்பன் நகர் வரை உள்ளது.இதில் சுங்ககேட், சபாபதி நாடார் தெரு, வாய்க்கால் மேடு, பள்ளிவாசல் பகுதியில், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் காவிரி ஆற்றுக்கு செல்ல பொது மக்கள் சிறு நடைபாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.வாய்க்கால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், படிக்கட்டு மற்றும் பாலங்களை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, வாய்க்காலின் சிறுநடை பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சிறு நடைபாலத்தில் பொது மக்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். பாலத்தில் செல்லும் போது தவறி விழுகின்றனர்.எனவே, பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாசன வாய்க்கால் நடைபாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி