உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

கரூர், கரூரில் உயிர்ப்பலி வாங்கி கொண்டிருக்கும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாநகராட்சியில், தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை சாலை, ஈரோடு சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் இரவு, பகலாக சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள், கால்நடைகளை கடித்தும் வருகின்றன. சாலைகளின் மைய தடுப்புச்சுவரின் இடைவெளி வழியாக, திடீரென குறுக்கே ஓடும் நாய்களால், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இது குறித்து மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் கூறியதாவது:தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் உரிமை மாநகராட்சிக்கு உள்ளது. வாங்கல் செல்லும் சாலையில் உள்ள, நாய்கள் கருத்தடை மையம் செயல்படுகிறதா என சந்தேகம் உள்ளது. மாநகராட்சியில் தெரு நாய்களை பிடிக்கவே இல்லை. அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. முன்பெல்லாம் நாய்களை பிடித்து கருத்தடை செய்தனர். அதிகாலையில் நடைபயிற்சி செய்வோரையும் தெருநாய்கள் விட்டு வைப்பதில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை