உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூச்சாங்கிணற்றில் தெருவிளக்கு அமைக்க வேண்டுகோள்

பூச்சாங்கிணற்றில் தெருவிளக்கு அமைக்க வேண்டுகோள்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட, 7வது வார்டு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், பூச்சாங்கிணறு என்ற பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நுழைவு வாயிலில், தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதால் சாலை முழுவதும் ஈரப்பதத்துடனேயே காணப்படும்.மேலும், தெருவிளக்கு இல்லாததால், இரவில் முதியவர்கள் இந்த சாலையில் நடந்தோ அல்லது டூவீலரிலோ செல்லும்போது வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சிறுவர்கள், இரவில் விளையாடி கொண்டிருக்கும்போது, விஷ ஜந்துக்களின் நட-மாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அச்சத்தில் வசித்து வருகின்-றனர்.எனவே, பூச்சாங்கிணறு பகுதியில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ