வரும் 30க்குள் பேரூராட்சிக்கு வரி செலுத்த வேண்டுகோள்
அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை, வரும், 30க்குள் செலுத்தினால், 2.5 சதவீத வரி தள்ளுபடி என, பேரூராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகிறது.அரவக்குறிச்சி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தெரு விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள், பேரூராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அரவக்குறிச்சி பேரூராட்சியில், 2025-26ம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக பேரூராட்சியில் இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்.வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக, வரித்தொகையை அலுவலகத்தில் செலுத்த வேண்டும். வரும், 30க்குள் செலுத்தினால், 2.5 சதவீத வரிச்சலுகை அளிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவரும் வரிச்சலுகையை பெற்று பயனடையுமாறு, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.