16 கால் மண்டபம் அருகே பேரிகார்டு வைக்க கோரிக்கை
கரூர்: கரூர், 16 கால் மண்டபம் அருகே பேரிகார்டு வைத்து, விபத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூரில் இருந்து நெரூர், சோமூர், கோயம்பள்ளி போன்ற பல்-வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், அரசு காலனி, காளி-பாளையம் வழியாக சென்று, 16 கால் மண்டபம் அருகே பிரிந்து செல்கிறது. இந்த, 16 கால் மண்டபம் பகுதியில் நெரூர், திருமுக்-கூடலுார் போன்ற பகுதிகளுக்கும், சோமூர், கோயம்பள்ளி போன்ற பகுதிகளுக்கும் சாலைகள் பிரிகிறது. இங்கு, மூன்று வழிப்போக்குவரத்து நடக்கிறது.பல்வேறு கிராம பகுதிகளை உள்ளடக்கிய இந்த சந்திப்பு வழி-யாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சந்திப்பு பகுதியில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அவ்வப்போது விபத்து சம்பவம் ஏற்பட்டு வருகிறது. இதை கட்-டுப்படுத்தும் வகையில், இப்பகுதியில் பேரிகார்டு வைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது