உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கிளைகளால் பாதிப்பு அகற்ற வேண்டுகோள்

மரக்கிளைகளால் பாதிப்பு அகற்ற வேண்டுகோள்

குளித்தலை:குளித்தலை அடுத்த தண்ணீர்பள்ளியில் பட்டவர்த்தி, ராஜேந்திரம் வழியாக மருதுார் சோதனைச் சாவடி பிரிவு சாலை வரை, சாலையில் இரு புறங்களிலும், நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான மரங்கள் வளர்ந்துள்ளன.தாழ்வான வகையில் மரக்கிளைகள் இருப்பதால், இச்சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், சொகுசு வாகனங்கள் செல்லும் போது, முன் கண்ணாடி மற்றும் சைடு கண்ணாடிகளில் உரசி சேதம் ஏற்பட்டும், விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையில் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி, மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என, கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை