உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை

வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை

கரூர்: கரூர் - ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவில் வழிகாட்டி பலகையை சூழ்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில், பெரும்பாலானவர்கள் பஸ், கார், இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு சாலை மார்க்கமாக வருபவர்களின் வசதிக்காக முக்கிய பகுதிகளில் தேவையான இடங்களில் ஊர் பெயர் எழுதப்பட்ட வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாகன ஓட்டிகள், சரியான இடத்திற்கு சென்று வருகின்றனர்.கரூர் - ஈரோடு சாலை யில், ஆத்துார் பிரிவில் வழிகாட்டி பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டி பலகையை மறைக்கும்அளவிற்கு மரக்கிளைகள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், திக்கு தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வழி காட்டி பலகையை சூழ்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை