சின்னதாராபுரம் கடை வீதியில் சிக்னல் அமைக்க கோரிக்கை
கரூர்: சின்னதாராபுரம், கடை வீதி பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர், தாராபுரம் நெடுஞ்சாலையில் சின்னதாராபுரம் கடை வீதியில் போலீஸ் ஸ்டேஷன், வாரச்சந்தை, போஸ்ட் ஆபீஸ், வி,ஏ.ஓ., அலுவலகங்கள், ஆர்.ஐ.அலுவலகம், வணிக நிறுவ-னங்கள் உள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்பட பலர் பணி நிமித்தமாக சின்னதாராபுரம் வழியாக செல்-கின்றனர்.தென்னிலை பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், கரூரிலி-ருந்து சின்னதாராபுரம் வரும் வாகன ஓட்டிகளும், கடைவீதியில் தான் திரும்புகின்றன. எப்போதும் வாகன போக்குவரத்து அதிகள-விலேயே உள்ளது. எனவே, கடைவீதி பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.