கணவன், மனைவியை மிரட்டிய 2 பேருக்கு காப்பு
கரூர், கரூர் அருகே கணவன், மனைவியை மிரட்டியதாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு அங்கப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் மதுசூதன், 19. இவர், நண்பர் பாரத்குமார், 23, என்பவருடன் சேர்ந்து, குடிபோதையில் கடந்த, 25ல் சாலையில் நின்று சத்தம் போட்டு கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன், 43; அவரது மனைவி மரியம் பீவி, 38; ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மதுசூதன், பாரத்குமார் ஆகியோர், கத்தியை காட்டி ஜாகீர் உசேன், மரியம் பீவியை மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து, மரியம் பீவி அளித்த புகார்படி, வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., ஆர்த்தி விசாரித்து மதுசூதன், பாரத்குமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்தார்.