உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனநலம் பாதித்து சுற்றி திரிந்த இளம் பெண் மீட்பு

மனநலம் பாதித்து சுற்றி திரிந்த இளம் பெண் மீட்பு

குளித்தலை : குளித்தலை பஸ் ஸ்டாண்ட், சுங்ககேட், பெரியபாலம், ரயில் நிலையம், தெப்பக்குளம், கடம்பர்கோவில் காவிரி ஆற்றுபடுகை பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வந்தார்.மேலும் தகாத வார்த்தையால் பேசி, கல்லால் அடித்தும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி வந்தார். பெண்ணை பாதிப்பில் இருந்து மீட்டு, மறுவாழ்வு அளிக்கும் வகையில் சமூக ஆர்வலர் கருணாநிதி கொடுத்த தகவல்படி, சீத்தப்பட்டி சாந்திவனம் மனநல காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் தலைமையில், மருத்துவ குழுவினரான செவிலியர் மருதாம்பாள், மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர், தெப்பகுளம் பகுதியில் சுற்றித்திரிந்த இளம் பெண்ணை மீட்டு, மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ