உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வருவாய் துறை அலுவலர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

வருவாய் துறை அலுவலர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 30-தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின், ஊழியர் விரோத போக்கை கண்டிப்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்ட வருவாய்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். அதே போல், கரூர் தாலுகா அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.நேற்று கரூர் மாவட்டம் முழுவதும், 150க்கும் மேற்பட்ட, வருவாய் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி