வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கரூரில் காத்திருப்பு போராட்டம்
கரூர்: கரூர் தாலுகா அலுவலகத்தில், வருவாய் துறை கிராம ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு, சி.பி.எஸ்., எண் நிரந்தரமாக வழங்க வேண்டும். கிராம பணியை தவிர, மற்ற பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், புகழூர் வட்ட தலைவர் ஜெகநாதன், செயலாளர் விசாலாட்சி, பொருளாளர் ராஜாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.