உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்றில் மணல் கடத்தல்; நான்கு பேர் மீது வழக்கு

ஆற்றில் மணல் கடத்தல்; நான்கு பேர் மீது வழக்கு

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் தண்ணீர்பந்தல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு, லாரியில் மணல் கடத்துவதாக குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வதியம் பஞ்., கண்டியூர் பிள்ளையார் கோவில் தெரு சிபி சக்கரவர்த்தி, 30, கார்த்திக்கேயன், 38, குளித்தலை அண்ணா நகர் மணிகண்டன், 41, ஐநுாற்றுமங்கலம் ராஜாராம் ஆகியோர் அங்கிருந்து தப்பினர். போலீசார் டாரஸ் லாரியை பறிமுதல் செய்து, மருதுார் சோதனை சாவடியில் நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து, குளித்தலை போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை