சாலையோர மரக்கன்றுகள் பராமரிப்பு பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்.,க்குட்பட்ட லாலாப்பேட்டை கொடிக்கால் சாலை முதல் வல்லம், கொம்பா-டிப்பட்டி, சாலை வரை பஞ்., சார்பில் பல்வேறு வகையான மரக்-கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகள் பாதுகாக்கும் வகையில், பஞ்.,ல் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு தடுப்பு அமைப்பதற்கான பணிகள் நடந்தன. இதில், கால்நடைகளிடம் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இப்பணிகளை பஞ்., நிர்-வாகம் பார்வையிட்டது.