உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துாய்மை பணியாளர் நலவாரியத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

துாய்மை பணியாளர் நலவாரியத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

கரூர், ''நல வாரியத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரியத்தின் சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். பின், தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 2007ம் ஆண்டு துாய்மை பணியாளர்களுக்கென தனியாக நலவாரியம் தொடங்கப்பட்டது. தற்போது, நல வாரியத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நலவாரியத்தின் மூலமாக துாய்மை பணியாளர்களுக்கு திருமண உதவித் தொகை, விபத்து காப்பீட்டு திட்ட உதவித்தொகை, இயற்கை மரண உதவி மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.உள்ளாட்சி பகுதிகளில் கழிவுநீர் அகற்ற, அதிநவீன ரோபோடிக் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. துாய்மை பணியாளர்கள் எக்காரணத்தை கொண்டும், மலக்குழியில் இறங்கி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடக் கூடாது.இவ்வாறு கூறினார்.தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரிய துணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன், மேயர் கவிதா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) முருகவேல், மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ