உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் ரூ.476 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்: அமைச்சர் செந்தில்பாலாஜி

மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் ரூ.476 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்: அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர்: ''கரூர் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில், 476 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிகளில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 200 ஏக்கர் பரப்பளவில் 'சிப்காட்' நிறுவனம், ஐ.டி., பார்க் அமைக்கப்பட உள்ளது. தான்தோன்றிமலையில் பழைய எஸ்.பி., அலுவலகம் செயல்பட்ட இடத்தில், மகளிர் தங்கும் விடுதி அமைய உள்ளது. மாவட்டத்தில் முதல்வரின் முகவரி திட்டத்தில், 53,972 மனுக்கள் பெறப்பட்டு, 53,966 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில், 476 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டமும், 113 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா, டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ., இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை