மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவில் மண்டல பூஜை துவக்கம்
26-Dec-2024
கரூர், டிச. 27- கரூரில், ஐயப்பா சேவா சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு ருத்ர ஹோமம் நடந்தது.கரூர், ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின், 38ம் ஆண்டு விழா நேற்று காலை, 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. பின் மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. பின், ஏகாதசி ருத்ர ஹோமம் நடந்தது. விநாயகர், முருகன், ஐயப்பன், மாரியம்மன் சுவாமிகளுக்கு, அலங்கார சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின், மகா தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.இன்று காலை, 6.00 மணிக்கு அமராவதி ஆற்றிலிருந்து பஞ்சவாத்தியம் மேளதாளத்துடன் தீர்த்தக் குடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து ஐயப்பனுக்கு மஹா அபிஷேகம் நடத்தப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு ஏகதின லட்ச்சார்ச்சனை துவங்குகிறது. மதியம் அன்ன தானம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜை, 8:00 மணிக்கு பக்தி இசை கச்சேரி நடக்கிறது.
26-Dec-2024