உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நுங்கு விற்பனை ஜோர்

நுங்கு விற்பனை ஜோர்

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நுங்கு விற்பனை கன ஜோராக நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த, 15 நாட்களாக சராசரியாக, 100 டிகிரி பாரன்ஹீட் முதல், 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெளியில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் இளநீர், தர்பூசணி, மோர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வரு-கின்றனர். இதனால், விற்பனை சூடுபிடித்துள்ளது.கோடைகாலத்தில் மட்டும் விற்பனைக்கு வரும், நுங்கு விற்-பனை கரூர்-கோவை சாலை, காமராஜ் தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, காந்தி கிராமம், சுங்ககேட், வெங்கமேடு உள்-ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று நுங்கு, 20 ரூபாய் வரை விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி