உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இருபுறமும் மணல் வாகன ஓட்டிகள் அச்சம்

இருபுறமும் மணல் வாகன ஓட்டிகள் அச்சம்

அரவக்குறிச்சி, கரூரிலிருந்து, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள், தென்னிலை வழியாக செல்கின்றன. இதில் கடைவீதி பகுதியில், சாலையின் இருபுறமும் ஏராளமான மணல் பரப்பு சேர்ந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர், எதிரே வேகமாக வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க நினைத்து, ஒதுங்கும்போது மணல் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், தென்னிலை பகுதியில் உள்ள மணல் பரப்பை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை