சர்வீஸ் சாலையில் சுகாதார சீர்கேடு
கரூர்: கரூர்-மதுரை பைபாஸ் சாலை, பெரியார் வளைவு அருகே, சின்-னாண்டாங்கோவில் பிரிவில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்-பாட்டில் உள்ளது. இந்த சர்வீஸ் சாலையில், பல்வேறு பகுதி-களில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டி குவித்து வருகின்-றனர். இதனால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அதிகளவு காற்று வீசும்போது, குப்பைகள் பறந்து சாலையில் பரவி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகம் சுளித்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குப்-பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்-டிகள் எதிர்பார்க்கின்றனர்.