கரூரில் குப்பை லாரியில் ஆபத்தான பயணம் செய்யும் துாய்மை பணியாளர்கள்
கரூர்: கரூர் மாநகராட்சியில், குப்பை லாரியில் ஆபத்தான முறையில் துாய்மை பணியாளர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.கரூர் மாநகராட்சியில் உள்ள, 48 வார்டுகளில் இருந்து தினமும் வீடுகளுக்கு சென்று, துாய்மை பணியாளர்கள் குப்பையை சேக-ரித்து வருகின்றனர்.இவ்வாறு, டன் கணக்கில் சேரும் குப்பை லாரிகள், வேன்கள் மூலம் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அந்த வாகனங்களில், குப்பையை நிரப்பிய பிறகு, அதன் மேல் துாய்மை பணியாளர்கள் அமர்ந்து கொண்டு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.இதனால், சாலை வளைவுகளில் திரும்பும் போது, விபத்து ஏற்-படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, குப்பை ஏற்றும் வாகனங்களில், பணியாளர்கள் ஏறிச் செல்வதை தவிர்க்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்த வேண்டியது அவசியம்.