கிருஷ்ணராயபுரத்தில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா
கிருஷ்ணராயபுரம் கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியில், இந்தாண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா நிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பரதநாட்டியம், நாட்டுப்புறபாடல், நடனம், கிராமிய நடனங்கள், தனி மற்றும் குழுவாக நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னி, ஆசிரியைகள் சாந்தகுமாரி, சுகன்யா, சாம்சு நிஷா, லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.