பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை
கரூர்: கரூர், மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்-நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.அதில், போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்-றங்களை தடுப்பது குறித்து, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில், பள்ளி உதவி தலைமையாசிரியை தேன்மொழி, மாநகராட்சி பிரதிநிதி லாரன்ஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.