மேலும் செய்திகள்
இளநீர் பண்ணை விலை 45 ரூபாயாக நிர்ணயம்
18-Aug-2025
கரூர், கரூரில் கோடையை போல, வெயில் கொளுத்துவதால், இளநீர் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.கரூர் மாவட்டத்தில், காவிரியாறு, அமராவதி ஆற்றுப்பகுதிகளின், கரையோர பகுதிகளில் மட்டும் தென்னை விவசாயம் நடக்கிறது. இதனால், இளநீர் சாகுபடி குறைந்தது. கரூர் மாவட்ட இளநீர் தேவைக்கு, திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலை பேட்டை மற்றும் ஈரோடு, கோவை மாவட்டங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், கரூரில் கடந்த சில நாட்களாக, கோடைக் காலத்தை போல, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.மேலும், இளநீர் வரத்து குறைவால் கடந்த மாதம், 30 ரூபாய் வரை விற்ற இளநீர் தற்போது, 40 ரூபாயில் இருந்து, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.இதுகுறித்து, இளநீர் வியாபாரிகள் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கோடையை போல, வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால், பொதுமக்கள் இளநீரை விரும்பி அருந்துகின்றனர்.மேலும், கரூர் மாவட்டத்தில், 70 சதவீதம் இளநீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், வெளி மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று இளநீரை கொள் முதல் செய்து, கொண்டு வருகிறோம். வரத்து குறைவு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களால், இளநீர் விலையை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
18-Aug-2025