உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், கடந்த, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், மாநிலம் முழுவதும், பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் சங்கரேஸ்வரி உள்பட, இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !