உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை விபத்தில் காவலாளி பலி

சாலை விபத்தில் காவலாளி பலி

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முத்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 77; புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பணி முடிந்த பிறகு, பழனியப்பன் சைக்கிளில் வேலாயுதம்பாளையம் அருகே, தளவாப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கேசவன், 25; என்பவர் ஓட்டி சென்ற டூவீலர், சைக்கிள் மீது மோதியது. அதில், கீழே விழுந்த பழனியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை