உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணி

மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணி

கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில், தற்போது விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி, விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யும் வகையில் கோடை உழவு செய்யப்பட்ட நிலங்களில், விதை தெளிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது, மானா-வாரி நிலங்களில், வெள்ளை எள் சாகுபடிக்கு விதை துாவும் பணி நடந்து வருகிறது. இந்த பருவத்தில் விதைகள் நன்கு வளர்ந்து, மகசூல் தரும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ