உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்கரூர், அக். 1-வேலாயுதம்பாளையம் அருகே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய் தனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, புஞ்சை தோட்டக்குறிச்சி தர்மராஜ புரம் பகுதியில், நேற்று முன்தினம் போலீஸ் எஸ்.ஐ., சுபாஷினி உள்ளிட்ட, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில், 89.325 கிலோ புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். மதிப்பு, 64 ஆயிரத்து, 200 ரூபாய். இதையடுத்து, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை குட்கா பொருட்களை பதுக்கி வைத்தவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி