உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எள் அறுவடை பணி மும்முரம்

எள் அறுவடை பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம், வேங்காம்பட்டியில் உள்ள மானாவாரி நிலங்களில், சாகுபடி செய்யப்பட்ட எள் செடிகளை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி, புதுப்பட்டி, தாளியாம்பட்டி பகுதியில் விவசாயிகள், மானாவாரி நிலங்களில் எள் சாகுபடி செய்துள்ளனர். மானாவாரி எள் சாகுபடிக்கு தென் மேற்கு பருவ மழை கை கொடுத்தது. இதனால் செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து காய்கள் பிடித்துள்ளன. தற்போது எள் செடிகளை, கூலி தொழிலாளர்கள் கொண்டு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் மழை துவங்குவதற்கு முன்பாக, அறுவடை பணிகளை முடிக்க விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை