உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாக்கடை வாய்க்காலில் கழிவு மண் அகற்றம்

சாக்கடை வாய்க்காலில் கழிவு மண் அகற்றம்

கிருஷ்ணராயபுரம்; கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டுகளில், சாக்கடை கழிவுமண் அகற்றும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்சா-யத்து வார்டுகளான கொடிக்கால் தெரு சாலை, மாரியம்மன் கோவில் சாலை, நுாலக சாலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் செல்கி-றது. கால்வாய் துார்வாராததால் கழிவுமண் தேங்கியது. கடந்த வாரம் பஞ்சாயத்து சார்பில் சாக்கடை வாய்க்காலில் தேங்கிய கழிவு மண் அகற்றப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை, கள்ளப்பள்ளி பஞ்-சாயத்து சார்பில் சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுமண்ணை பொக்லைன் இயந்திரம் கொண்டு அள்ளப்பட்டு, டிராக்டரில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை