உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிவாயத்தில் கழிவுநீர் கால்வாய் துாய்மை பணி

சிவாயத்தில் கழிவுநீர் கால்வாய் துாய்மை பணி

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து கோடங்கிப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.கால்வாய் வழியாக கழிவுநீர் மற்றும் மழை நீர் செல்லும் வழித்தடங்களில், செடிகள் வளர்ந்து வடிநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சுகாதார சீர்கேடும் உண்டானது. இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து சார்பில், துாய்மை பணியாளர்கள் துாய்மை பணிகளில் ஈடுபட்டனர். கழிவுநீர் கால்வாய் வழித்தடங்களில் வளர்ந்த செடிகள் மற்றும் மண் கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ