| ADDED : ஜூன் 01, 2024 06:20 AM
கரூர் : கரூர் அருகே, இரண்டாவது மனைவி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, நாடக நடிகரை குண்டர் சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை பெருமாள்பட்டியை சேர்ந்த, 47 வயது நாடக நடிகர். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். அதில், இரண்டாவது மனைவிக்கு, 14 வயதில் பெண் உள்ளது. கரூரில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நடிகர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, 14 வயது சிறுமி கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நடிகரை கடந்த ஏப்., 15ல் போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.இந்நிலையில், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, கரூர் எஸ்.பி., பிரபாகர் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் தங்கவேல், குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். அதற்கான நகல், திருச்சி மத்திய சிறையில் உள்ள நடிகருக்கு, கரூர் மகளிர் போலீசார் வழங்கினர்.