மேலும் செய்திகள்
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு
17-Aug-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., பஸ் ஸ்டாப் அருகில் சக்தி விநாயகர், பாலமுருகன் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள், பாலமுருகன் அறக்கட்டளை மற்றும் விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.இதையடுத்து. நேற்று முன்தினம் கிராம மக்கள், பக்தர்கள் காலையில் குளித்தலை காவிரி ஆற்றில் தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர், பக்தர்கள் கொண்டு வந்த புனிதநீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாகவேள்வியில் வைத்து, விக்னேஸ்வரர் பூஜை செய்து, தீபாராதனை காட்டினர்.நேற்று காலை 10:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சுற்றுப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
17-Aug-2025