உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

சக்தி விநாயகர் கோவில்கும்பாபிஷேக விழாகுளித்தலை, டிச. 8-குளித்தலை அடுத்த பில்லூர் பஞ்., முத்தக்கவுண்டம்பட்டியில், சக்தி விநாயகர் மற்றும் சுயம்பு பாம்பலம்மன் கோவில்கள் உள்ளன. கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்ய காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு, கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். நேற்று காலை காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் சக்தி விநாயகர், சுயம்பு பாம்பலம்மன் ஆகிய கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி