உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட காப்பகத்தினர்

மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட காப்பகத்தினர்

குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆர்.டி. மலை கடைவீதி பகுதியில், 30 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், உணவு கிடைக்காமலும், பாது-காப்பு இல்லாமலும் சுற்றிை் திரிந்து உள்ளார்.கடந்த, 10 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் சுற்றித் திhpந்தவரை மீட்டு உணவு, சிகிச்சை மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, அப்பகுதி முன்னாள் யூனியன் கவுன்சிலர் சின்-னையன் தோகைமலை போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் பரிந்-துரையின்படி, சாந்திவனம் மனநல காப்பகத்தின் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பி-னரான அரசப்பன் மேற்பார்வையில், ஒருங்கிணைப்பாளர் தீனத-யாளன், செவிலியர் அனிதா, மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர், அந்த நபரை பரிசோதனை செய்து பார்த்தனர். பின்னர் அவரை மீட்டு, திருச்சி தில்லை நகரில் உள்ள ஆத்மா மனநல மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !