உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் 2 இடங்களில் எஸ்.ஐ., எழுத்து தேர்வு

கரூரில் 2 இடங்களில் எஸ்.ஐ., எழுத்து தேர்வு

கரூர்: கரூரில், இரண்டு இடங்களில் போலீஸ் எஸ்.ஐ.,க்கான எழுத்து தேர்வு நடந்தது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள, 1,299 போலீஸ் எஸ்.ஐ., காலி பணியிடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு நடந்தது. கரூர் வெண்-ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நேற்று, போலீஸ் எஸ்.ஐ.,க்கான எழுத்து தேர்வு நடந்தது.அதில், விண்ணப்பித்திருந்த, 1,160 ஆண்களில், 804 பேர் தேர்வு எழுதினர். 356 பேர் ஆப்சென்ட் ஆகினர். அதேபோல், பெண்களில் விண்ணப்பித்திருந்த, 449 பேரில், 306 பேர் தேர்வு எழுதினர். 143 பேர் ஆப்சென்ட் ஆகினர். மொத்தமாக தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த, 1,609 பேரில், 1,110 பேர் தேர்வு எழுதினர். 499 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையத்தை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்-கையா ஆகியோர் ஆய்வு செய்தனர்.தேர்வு நடந்த, இரண்டு மையங்களிலும், இரண்டு ஏ.டி.எஸ்.பி.,க்கள், மூன்று டி.எஸ்.பி.,க்கள், ஒன்-பது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 47 போலீஸ் எஸ்.ஐ.,க்கள், 192 போலீசார், 23 ஆயுதப்படை போலீசார், 20 ஊர்க்காவல் படையினர் உள்பட, 296 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ