பயன்பாடின்றி சின்டெக்ஸ் தொட்டி
கரூர், கரூர் அருகில், மேலப்பாளையம் பஞ்சாயத்து பகுதியில், நுாற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். சாலையோரம் மக்கள் பயன்பாட்டுக்காக, சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. பயன்பாடின்றி, பலமாதங்களாக தண்ணீர் வராத நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் தண்ணீர் தட்டுப்பாடால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்-றனர். குடிநீரை காசு கொடுத்தும், பல கி.மீ., துாரம் பயணம் செய்தும் எடுத்து வருகின்றனர். இதுபோல பயனற்ற நிலையில் உள்ள, சின்டெக்ஸ் தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.