| ADDED : பிப் 04, 2024 11:13 AM
கரூர்: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதி போட்டியில் பங்கேற்ற, எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சட்டீஸ்கர் மாநிலம் துர்க்கில், பிலாய் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின், கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதி போட்டி நடந்தது. இதில், இந்தியா முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 18 அணிகள் கலந்து கொண்டன. இங்கு, கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி மின்னணு மற்றும் தகவல் தொடர்புவியல் மாணவர்கள் சூர்யநாராயணன், சுஜீத் விக்னேஷ், வெங்கடேஷ், வெண்ணிலா, விஷ்ணு பாரதி மற்றும் ஆசிரியர் ஷேக்தாவூத் ஆகியோர் பங்கேற்றனர். கல்லுாரி மாணவர்கள், ஹார்டுவேர் எடிசன் நிகழ்ச்சியில் மழை வெள்ள கண்காணிப்பு, சுரங்கப்பாதை உள் கட்டமைப்பிற்காக வடிவமைக்கப்பட்ட மேலாண்மை அமைப்பை காட்சிப்படுத்தினர். சாதனை படைத்த மாணவர்களை, கல்லுாரி நிறுவன செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன், துறைத்தலைவர் கவிதா, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகத்தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டினர்.