பள்ளப்பட்டி குப்பை கிடங்கில் தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் போராட்டம்
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கில், தீ பற்றி எரிந்ததால், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போராடி, தீய-ணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பள்ளப்பட்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சி வாக-னங்கள் மூலம், தினமும் சேகரிக்கப்படும் குப்பை, அங்குள்ள குப்பை கிடங்கில் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம், குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்-தது. காற்று வீசியதால், தீ வேகமாக பரவி குப்பை கிடங்கு மற்றும் சுற்று வட்டார குடியிருப்புகள் முழுவதும் புகை சூழ்ந்-தது. இதனால் சிறுவர், முதியோர் சிரமப்பட்டனர்.அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது. குப்பை கிடங்கில் இருந்த பிளாஸ்டிக், உதிரி பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதனால் அந்த பகுதி அதிக புகை மூட்டத்துடன் காணப்பட்டது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,' நகராட்சி நிர்வாகம் தினமும் குப்பைகளை சரியாக அகற்றாமல் இருப்பதால், தீ விபத்-துகள் ஏற்படுகின்றன. ஆண்டுக்கு ஆறு முறை, இது போன்ற தீ விபத்துகள் நடந்து வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு எடுக்கப்-பட வேண்டும்,' என்றனர்.சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த, பள்ளப்பட்டி நகராட்சி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,'' இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்-டருக்கு தகவல் அளித்துள்ளதாகவும், குப்பை கிடங்கை வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்கு, வருவாய் துறை சார்பில் இடம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் குப்பை கிடங்கை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.