உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துாய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண் பயிற்சி

துாய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண் பயிற்சி

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில். துாய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி நடந்தது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், தினமும் துாய்மை பணியாளர்களை கொண்டு குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பையை தரம் பிரித்து வாங்கும் வகையில், டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக வாங்க வேண்டும்; பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை தனியாக பெற வேண்டும் என, விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் துாய்மை பணியாளர்கள் முக கவசம், கை உறை அணிதல் அவசியம் குறித்து பேசப்பட்டது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம், திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்